மாகாண சமூக சேவைகள் திணைக்களம் சர்வதேச முதியோர் தினவிழா – 2024

மாகாண மட்ட சர்வதேச முதியோர் தின விழாவானது 15.10.2024ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ Hoover மாநாட்டு மண்டபத்தில் சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினர்களாக திரு இ.இளங்கோவன் பிரதம செயலாளர் வடக்கு மாகாணம் அவர்களும் யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி திரு எஸ்.ஸ்ரீசற்குணராசா அவர்களும் கலந்து கொண்டார்கள். இம் முதியோர் தின விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

சமூக சேவைத் திணைக்களப் பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து யாழ் பல்கலைக்களக பீடாதிபதி திரு எஸ்.ஸ்ரீசற்குணராசா, பிரதம செயலாளர் வடக்கு மாகாணம் திரு இ.இளங்கோவன் ஆகியோர்களால் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து முதியோர் தின மாநாடு தொடர்பான விளக்கவுரையினை மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சு.சுரேந்திரகுமார் நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து முதியோர் தின மாநாடு ஆரம்பமாகியது இம் மாநாட்டில் வைத்திய கலாநிதி ஏ.சுஜனிதா, பேராசிரியர் செகான் வில்லியம்ஸ், சிரேஸ்ட விரிவுரையாளர்(NISD) திருமதி ஏ. வரதகௌரி, சிரேஸ்ட விரிவுரையாளர்(NISD) திரு. ஏ. ஜெயரூபன், பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன், மற்றும் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா ஆகியோர் பேச்சாளர்களாக கலந்துகொண்டார்கள் அத்துடன் இம் மாநாட்டின் தலைவர்களாக பேராசிரியர் எஸ். சிவயோகன், பேராசிரியர் பி. பாலசுந்தரம்பிள்ளை மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.