வடமாகாண தொழிற்திணைக்களம் ,தேசிய அருங்கலைகள் பேரவை ,புடவைக்கைத்தொழில் திணைக்களம் ஆகியன மத்திய வங்கியுடன் இணைந்து நடாத்தும் மாகாண கைத்தொழில் கண்காட்சிக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 14 செப்ரெம்பர் 2019 அன்று மாலை விஜயம் செய்தார் .
கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்யும் வடமாகாண உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக யாழ் மத்திய கல்லூரியில் இன்று ஆரம்பமான இந்த கைத்தொழில் கண்காட்சி நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு