கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சிறுதானிய செய்கையினை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வானது 17.09.2025 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திருமதி கி.சுதர்சினி தலைமையில் கோணாவில் பிரதேசத்தில் மயில்வாகணம் விமலரத்தினம் எனும் விவசாயியின் வயல் துண்டத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் , விவசாயிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதி விவசாயப் பணிப்பாளர் அவர்கள் உரையாற்றுகையில் சிறுதானிய உணவுகளால் ஏற்படுகின்ற நன்மைகள் பற்றியும் சிறுதானிய செய்கையினை ஊக்குவிக்க வேண்டும் தெரிவித்தார். இவற்றின் மூலம் குறைந்த காலத்தில் விளைச்சலைப் பெற முடியும் என்பதோடு கால்நடைகளிற்கான உணவுகளிற்காகவும் இவை பயன்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
விவசாயப் போதனாசிரியர் கருத்து கூறுகையில் குறைந்த காலத்தில் அதிக விளைச்சலினைப் பெற்று இலாபம் பெற முடியும் என தெரிவித்தார் அத்துடன் இங்கு விளைகின்ற சிறுதானியங்கள் வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது எனவே எமது நாட்டிலே உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார். இதனை தொடர்ந்து விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில் சிறுதானிய செய்கையினை மேற்கொண்டு அவற்றினை சந்தைப்படுத்துவதற்குரிய வசதிவாய்ப்புக்களை தமக்கு ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வயல்விழா நிகழ்வினை அக்கராயன்குளம் பிரிவு விவசாயப் போதனாசிரியர் கி.சுதர்சினி அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.