எதிர்வரும் 05 ஆண்டுகளுக்காக திட்டமிடப்படும் அபிவிருத்தி இலக்குகள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவம் அவசியம் தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். மன்னார் நகரசபை மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (16/06/2024) மாலை நடைபெற்ற மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்தார்.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.