மன்னார் மறை மாவட்டத்தின் நான்காவது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருள் தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆயர் திருப்பொழிவுத் திருவழிபாடு இன்று சனிக்கிழமை காலை (22.02.2025) மடுத் திருத்தலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார்.
மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு மற்றும் திருப்பலி என்பன இடம்பெற்றன.
அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தொடர்பில் வெளியிடப்பட்ட நூலும், ஆளுநரிடம் இதன்போது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.