மஞ்சள் அறுவடை மற்றும் பதப்படுத்தல் வயல் விழா 25.02.2022 புதன் கிழமை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம்இ திருநெல்வேலியில் திருமதி. அ.சிறிரங்கன் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்இ யாழ்ப்பாணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.அ.சிவபாலசுந்தரன், செயலாளர், விவசாய அமைச்சு, வடமாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. சி.சிவகுமார் மாகாண விவசாயப் பணிப்பாளர் வட மாகணம், அவர்களும் அத்துடன் துறைசார் அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள் மஞ்சள் செய்கையாளர்கள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது மஞ்சள் பயிர்ச் செய்கையின் பயிராக்கவியல் நடவடிககைகள் அறுவடை முறைகள் மற்றும் பதப்படுத்தல் முறைகள் தொடர்பாக உத்தியோகத்தர்களினால் செயன்முறை ரீதியாக பூரண விளக்கமளிக்கப்பட்டது.இவ் விழாவில் மஞ்சளினை மெருகூட்டவதற்காக விவசாயி ஒருவரினால் வடிவமைக்கப்பட்ட மெருகூட்டும் இயந்திரம் காட்சிபடுத்தப்பட்டதுடன் அவ் இயந்திரம் மூலம் மெருகூட்டல் முறை செயன்முறையானது ரீதியாக செய்து காட்டப்பட்டது.
அண்ணளவாக தனிமனித நுகர்விற்காக ஒரு வருடத்திற்கு 600g மஞ்சள் தூள் தேவைப்படுகின்றது. யாழ் மாவட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு 360mt மஞ்சள் தூள் தேவைப்படகின்றது. எனவே இத் தேவையை பூர்த்தி செய்வதற்கு 36ha இல் மஞ்சள் பயிர்செய்கை யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளவேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.