போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு நடைபெற்றது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைவாக, போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு 3 ஏப்பிரல் 2019 ஆம் திகதி, கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. பிரதி பிரதம செயலாளர்கள் – நிதி மற்றும் நிர்வாகம், பிரதம செயலாளர் செயலகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றின் அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக தேசிய கொடி மற்றும் மாகாணக் கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை பிரதிப் பிரதம செயலாளர்- நிதி ஆர்.பத்மநாதன் ஏற்றிவைத்தார் மற்றும் மாகாணக் கொடியை பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம் திருமதி. எஸ்.மோகநாதன் ஏற்றிவைத்தார்.

”சித்திரை புதுவருட உறுதியுரை” ஆனது உதவி பிரதம செயலாளர் – நிர்வாகம் செல்வி.உ.தர்ஷினி அவர்களினால் தமிழ் மொழியில் வாசிக்கப்பட்டது. இவ் உறுதிமொழியை ஏனைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் வாசித்து .

”போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான” ஆரம்ப விழாவானது சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவில் நடைபெற்றது, இந் நிகழ்ச்சிகளின் நேரலையை தொலைக்காட்சியூடாக அலுவலர்களிற்கு காட்சிப்படுத்தப்பட்டது.

பிரதி பிரதம செயலாளர் – நிதி அவர்களினால் சிறிய உரை ஒன்று நிகழ்த்தப்பட்டது, இவ் உரையில் போதைப்பொருட் பாவனையினால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தாக்கங்கள், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களினால் இலக்குவைக்கப்படும் குழுவினர், இவற்றினை தடுப்பதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், போதையற்ற நாட்டினை உருவாக்குவதில் அரச அலுவலர்களின் வகிபாகம் என்பனவற்றினை உள்ளடக்கியதாக அமைந்தது. இதனை தொடர்ந்து நிகழ்வு மு.ப 9.00 மணிக்கு முடிந்தது.