வடமாகாண மகளிர் விவகார அமைச்சினால் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விளிம்பு நிலையிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் கடந்த வருடம் 12.12.2024 அன்று யாழ்ப்பாண மாவட்டத்திலும் 18.12.2024 அன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 20.12.2024 அன்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் தீர்க்கமான பங்களிப்புடன் இடம்பெற்றது.
,ந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த நாற்பது பயனாளிகளில் புதிய தொழில் முயற்சிகளுக்காக ,ருபத்தொன்பது பயனாளிகளுக்கும் சுயதொழிலை மேலும் விரிவாக்குவதற்காக பதினொரு பயனாளிகளுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பதினான்கு பயனாளிகளில் புதிய தொழில் முயற்சிகளுக்காக பதினொரு பயனாளிகளுக்கும் சுயதொழில் விரிவாக்கத்திற்காக மூன்று பயனாளிகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பதினாறு பயனாளிகளில் புதிய தொழில் முயற்சி – பதினான்கு, சுயதொழில் விரிவாக்கம் – இரண்டு பயனாளிகளுக்கும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ,ருபத்திமூன்று பயனாளிகளில் புதிய தொழில்முயற்சி – பதினெட்டு , சுயதொழில் விரிவாக்கம்- ஐந்து பயனாளிகளுக்கும் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பதினாறு பயனாளிகளில் புதிய தொழில்முயற்சி – பதினொன்று, சுயதொழில் விரிவாக்கம்- ஐந்து பயனாளிகளுக்கும் குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பயனாளிகளான பெண் தலைமைத்துவக் குடும்பத்தினருக்கான எளியகணக்கு வைப்பு முறை தொடர்பான தெளிவூட்டலும் வழங்கப்பட்டு, அமைச்சின் கண்காணிப்பு பொறிமுறை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
https://i.imgur.com/2UHoS3X.jpg