பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – யாழ்ப்பாணம்

பெண் தலைமைத்துவக்  குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக  நிகழ்வானது 2018.12.12 ஆம் திகதி  அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் மகளிர் விவகார அமைச்சு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, நல்லூர் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த  ஐந்து பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமையல் உபகரணங்கள் மின்சார நீர் இறைக்கும் மின் மோட்டர், தையல் இயந்திரங்கள்  மற்றும் சிறிய அரைக்கும் மின் இயந்திரம் போன்ற ரூபா 219,891.90 பெறுமதியான உபகரணங்கள் மற்றும் சமையல் பாத்திரங்களைப் பெற்றுக்கொண்டனர்.