பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட குமரபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வானது 26.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் T.மகேஸ்வரன்(குணா),குமரபுரம்,பரந்தன் என்னும் முகவரியில் உள்ள அவரது வயலில் வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டலில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.N.சரண்ஜா அவர்களின் தலைமையில் யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் மற்றும் கமநல சேவைகள் நிலையத்தின் அலுவலர்களுடன் இணைந்து நடாத்தப்பட்டது .

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.சூ.ஜெகதீஸ்வரி (பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், கிளிநொச்சி) அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக திரு.பா.தேவரதன் (மாவட்ட பிரதி ஆணையாளர், கமநல அபிவருத்தி திணைக்களம், கிளிநொச்சி), திருமதி.லோகா பிரதீபன் (சிரேஸ்ட விரிவுரையாளர், விவசாய பீடம். யாழ் பல்கலைக்கழகம்.), ம.றஜிதன் (இந்திரா குழும இயக்குனர்), இந்திரா குழும பணியாளர்கள், மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், நலன் விரும்பிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் வயல் விழா நிகழ்வில் பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையலான நெற்செய்கை தொடர்பான விளக்கங்களும் அதன் தேவைகள்; பற்றியும் யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பாகவும் விளக்கம்; அளிக்கப்பட்டதுடன், பரசூட் மற்றும் இயந்திர நாற்றுநடுகை தொழில்நுட்ப முறையலான நெற்செய்கையினை பார்வையிடல் நிகழ்வானது இடம் பெற்றது. பின்னர் விவசாயிகளின் கருத்துரை மற்றும் விருந்தினர்களின் உரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.