தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் இழப்பையொட்டி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகள் எமது சமூகத்தில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன.
கொழும்பில் காலத்தின் தேவைகருதி அவர் ஆரம்பித்த தினக்குரல் பத்திரிகை சமாதான காலத்தில் யாழ்ப்பாண மண்ணிலிருந்தும் வெளிவரத் தொடங்கியது. பிராந்திய ஊடகங்களின் செல்வாக்கு மிகுந்த வடக்கு மண்ணிலிருந்து ஏற்கனவே வெளிவந்த பிராந்தியப் பத்திரிகைகளுக்கு மேலதிகமாக யாழ் தினக்குரலை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நடத்திய ஒருவராக இருக்கின்றார். பக்கச் சார்பற்ற ஊடகமாக அதனை வளர்த்தெடுத்து இன்றுவரை அந்த நற்பெயர் நிலைநாட்டுவதற்கான காரணகர்த்தாவாக சாமி அவர்களே இருந்திருக்கின்றார்.
எமது யாழ்ப்பாண மக்களுக்கு நன்கு அறிந்த ஓர் தனியார் மருத்துவமனையாக நொதேர்ன் சென்ரல் மருத்துவமனையை ஆரம்பித்த பெருமையும், போர்க்காலத்தில் அந்தத் தனியார் மருத்துவமனை ஆற்றிய பங்களிப்புக்களும் குறிப்பிடத்தக்கவையே.
தொழிலதிபராக மாத்திரமல்லாது சமூக, சமய சேவைகளையும் ஆற்றிய அவரின் இழப்பு எமது சமூகத்துக்கு பேரிழப்பே.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் இந்த மிகப்பெரிய இழப்பைத் துக்கப்படுத்தும் அனைவருக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

வடக்கு மாகாண ஆளுநர்,
நா.வேதநாயகன்