நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களைநெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களைநெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் 08/01/2026 அன்று நடைபெற்றது.

மாகாண விவசாய பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மாகாண மற்றும் மத்திய விவசாய திணைக்களங்கள், நீர்ப்பாசன திணைக்களம்,கமநல சேவைகள் திணைக்களம், என்பவற்றின் அதிகாரிகள்,யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் போகங்களில் களைநெல்லை கூட்டாக கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள், தந்திரோபாயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.