நூலக நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்துக்கு அந்த நிறுவனத்தின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 29.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டதுடன், அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.