நாட்டின் சுபீட்சத்தை மேம்படுத்தும் நோக்கில் விவசாய அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக நாட்டின் செழுமையை நினைவுகூரும் பொருட்டு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் ஒழுங்கமைப்பில் மரநடுகை நிகழ்வானது 20.04.2023 அன்று வியாழக்கிழமை சுபநேரம் காலை 6.38 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், இறைவரி திணைக்கள ஆணையாளர், உதவிப்பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இம் மரநடுகை நிகழ்வில் நீண்ட காலம் பயன் தரக்கூடிய புங்கை, மருதம், இலுப்பை, சவுக்கு மரங்கள் உள்ளடங்கலாக 20 மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.