தெற்கு முதல் வடக்கு வரையுள்ள விகாரைகளுக்கு 5 நாடுகளின் தேரர்கள் பாதயாத்திரை

அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம முதல் நயினாதீவு நாகதீப விகாரை வரையில் 5 நாடுகளின் தேரர்கள் இணைந்து பாதயாத்திரை முன்னெடுத்துள்ளனர். இதில் பங்கேற்றுள்ள 50 தேரர்கள் 07.03.2025 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வருகைதந்தனர். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தேரர்களை வரவேற்றார்.
தாய்லாந்து, மியான்மார், லாகோஸ், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேரர்களே இந்தப் பாதயாத்திரையில் இணைந்துள்ளனர்.