அண்மைக் காலத்தில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக தென்னைச் செய்கையில் வெண் ஈக்களின் (Aleurodics cocois) தாக்கம் பாரிய அளவில் அவதானிக்கப்பட்டிருந்தது.
வெண் ஈயானது தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் சிறிய பூச்சி ஆகும். இது இலைகளின் சாறு உறிஞ்சுவதன் மூலம் மர வளர்ச்சி, தேங்காய் உற்பத்தியை பாதிக்கும் மற்றும் வைரஸ் நோய்களை பரப்பும். இதன் பாதிப்பு அறிகுறிகளாக இலைகளின் அடிப்பக்கத்தில் வெண் ஈக்கள் கூட்டமாக காணப்படுதல், இலைகள் மஞ்சளாக மாறுதல், ,உலர்தல், தென்னை மர வளர்ச்சி குறைதல், கரும்பூஞ்சணம் வளர்ச்சி ஆகியன அமைகின்றன.
இதனை கட்டுப்படுத்துவதற்காக சவர்கார நீர் தெளிப்பு, வேப்பெண்ணெய் விசிறுதல் ((200ml -300ml /10 litre water)) ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் வெண் ஈக்களை உயிரியல் ரீதியாக கட்டுப்படுத்துவதற்காக Encarsia guadeloupae என்ற Parasitoid wasp (குளவி) பயன்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் வெண் ஈக்களை உயிரியல் ரீதியாக கட்டுப்படுத்துவதற்காக பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம், கன்னொறுவையிலிருந்து Encarsia guadeloupae என்ற Parasitoid wasp (குளவி) கொண்டு வரப்பட்டு 24.04.2025 ஆம் திகதி பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.சிறிரங்கன் தலைமையில் பகுதிக்குரிய விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் தென்னை அபிவிருத்தி சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தரகள் இணைந்து வரணி, திக்கம், தையிட்டி கிழக்கு, புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஆகிய இடங்களில் Encarsia ஒவ்வொரு பகுதிகளிலும் விடுவிக்கப்பட்டது.