தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் – ஆளுநர் சந்திப்பு

சென்னைக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 12 நவம்பர் 2019 அன்று முற்பகல் சென்னையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது ஆளுநர் அவர்கள் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும், வடமாகாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டார். இதற்கான ஒரு படியாகவே தி.மு.கவின் தலைவரும் தமிழ்நாட்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்ராலின் அவர்களை சந்தித்ததாக மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 41 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இந்தியாவின் சென்னைக்கான பயணிகள் விமான சேவையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை முன்னேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

-ஆளுநரின் ஊடகப்பிரிவு