தாவர தனிமைப்படுத்தல் அலகு யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு.

தாவர மற்றும் தாவர உற்பத்திகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான தனிமைப்படுத்தல் அலகொன்று யாழ்ப்பாணம் தபால் நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்தல் அலகை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து கடந்த 22 ஆம் திகதி திறந்து வைத்தார்.

இலங்கையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான தாவர தனிமைப்படுத்தல் அலகானது கட்டுநாயக்கவில் மாத்திரமே காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது யாழ்ப்பாண தபால் நிலையத்திலும்  தாவர தனிமைப்படுத்தல் அலகு திறந்து வைக்கப்பட்டமையானது வடமாகாணத்தில் தாவர ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடுவோருக்கு மேலும் வசதிகளை இலகுபடுத்துவதாக அமைந்துள்ளது.