தர்மபுரம் பிரதேசத்தில் காளான் செய்கை அறுவடை விழாவும், காளான் கொட்டகை திறப்பு விழாவும்

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் தர்மபுரம் 10ஆம் யுனிற் எனும் இடத்தில் திரு.ப.யோகநாதன் என்பவரின் காளான் அறுவடை விழாவும் புதிய காளான் கொட்டகை திறப்பு விழாவும் விவசாயப் போதனாசிரியர் திருமதி.க.சரண்யா தலைமையில் 20.01.2026 அன்று மு.ப.10.30 மணியளவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாகாண விவசாயப்பணிப்பாளர் அவர்களும் மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், மாகாண விவசாயத்திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர், பாடவிதான உத்தியோகத்தர்கள், கண்டாவளை பிரதேச விவசாயப் போதனாசிரியர்கள், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கமக்கார அமைப்பினர் விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் எதிர்வரும் காலங்களிலும் தொடரச்சியான முறையில் காளான் செய்கையினை சிறப்பாக மேற்கொண்டு சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் காளான் வளர்ப்பு மற்றும் நோய்தாக்கங்கள் அவை சார்ந்த அனைத்து விடயங்களிற்கான தீர்வுகளை விவசாயப் போதானாசிரியரிடமும் எமது அலுவலக பாடவிதான உத்தியோகத்தரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் கூறினார்.

பாடவிதான உத்தியோகத்தரால் காளான் மூலம் செய்யப்படுகின்ற பெறுமதி சேர் உணவுப் பொருட்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மற்றும் திரு.ப.யோகநாதன் எனும் பயனாளிக்கு PSDG திட்டத்தால் பகுதி மானியமாக காசோலை வழங்கப்பட்டது. குறித்த அறுவடைவிழாவானது சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.