பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் கிளிநொச்சி, தர்மக்கேணி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயிகள் பயிற்சி நிலையம் தர்மக்கேணியில் 21.01.2026 அன்று காலை 09.30 மணியளவில் விவசாயப் போதனாசிரியர் திரு.க.ஜனார்த்தனன் தலைமையில் ‘ஒருங்கிணைந்த முறையில் பயிர்ச்செய்கை’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்(பூங்கனியியல்), பாடவிதான உத்தியோகத்தர்(மறுவயற்பயிர்), பாடவிதான உத்தியோகத்தர்(பயிர்பாதுகாப்பு), விவசாயப் போதனாசிரியர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர், சோரன்பற்று கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயற்கை முறையிலான பயிர்ச் செய்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். பகுதி கருக்கிய உமி, கோசலம், ஐந்திலைக் கரைசல், கூட்டெரு என்பன தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இவ் இயற்கை இரசாயனங்களை பயன்படுத்திதான் சோளம், மாமரம், மாதுளை போன்றன செய்கை பண்ணப்பட்டதாக விவசாயப் போதனாசிரியர் கூறினார்.
மேலும் பாடவிதான உத்தியோகத்தரால் (பூங்கனியியல்) மாமரம் மற்றும் மாதுளை கத்தரித்தல் முறையானது செய்கைமுறையினூடாக பயிற்றுவிக்கப்பட்டது சிறப்பானதாகும். மற்றும் நோய் பீடைத்தாக்கங்கள் அதன் தீர்வுகள், Fruit Cover bag என்பன இடும் முறைகள் பற்றியும் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பயிர்களில் ஏற்படுகின்ற நோய்களை எவ்வாறு இலகுவில் இனங்காண்பது என்பது பற்றியும், அதற்கான தீர்வுகளும் பாடவிதான உத்தியோகத்தரால்(பயிர்பாதுகாப்பு) வழங்கப்பட்டது.
பகுதி கருக்கிய உமி மற்றும் Multi Chopper செயற்பாடுகள் என்பன செய்முறை மூலம் விவசாயிகளுக்கு தெளிவு படுத்தப்பட்டது.
மேலும் சோரன்பற்று கிராம சேவை உத்தியோகத்தர் விவசாயிகள் இயற்கை முறையிலான பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி கூறினார்.
தொடர்ந்து களப்பார்வையுடன் குறித்த வயல்விழாவானது சிறப்பான முறையில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





