டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக யாழ்மாவட்ட செயலகத்தால் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக வடக்கு மாகாணசபை வளாகத்தில் அமைந்துள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு 23.09.2025 அன்று பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த செயலமர்வில் சமூக மருத்துவர் வைத்தியகலாநிதி நாகராசா பரமேஸ்வரன் அவர்களும் வைத்தியகலாநிதி துவாரகா சுதன் அவர்களும் வளவாளர்களாக   கலந்து கொண்டனர்.