“ஜெயகமு ஸ்ரீ லங்கா” நடமாடும் சேவை – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து சேவைகளையும் தமது பிரதேசங்களிலேயே நடமாடும் சேவையின் மூலம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வானது சித்திரை மாதம் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மானுச நானயக்கார மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு ஊக்குவிப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ ஜகத் புஷ்பகுமாரஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் தொழில் வாய்ப்பை உருவாக்ககூடிய மற்றும் தொழில்வாய்ப்புக்களை அடையாளம் காணக்கூடிய விடயங்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தனித்தனி விற்பனையகங்களை அமைத்திருந்தனர். அந்தவகையில் மாவட்ட விவசாய திணைக்களமும் இத்தொழில் சந்தையில் பங்குபற்றியிருந்தது.

இத்தொழில் வழங்குநர் சந்தையில் பிரதி மாகாகண விவசாய பணிப்பாளர் திரு. S. F. C. உதயசந்திரன், உதவி விவசாய பணிப்பாளர், பாட விடய உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய போதனாசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் மாவட்ட விவசாய திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற “அம்மாச்சி” பாரம்பரிய உணவு உற்பத்தி நிறுவனம் அதன் தொழிற்பாடுகள் மற்றும் புதிய தொழில்வாய்ப்புகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விவசாயத்துறையில் இளைஞர்களுக்கான வேலைவாயப்ப்புகள் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி புதிய தொழில்வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கி கொள்வது தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டது. தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறிகளை விவசாய துறையில் மேற்கொள்ளல் மற்றும் NVQ தர சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு வெளிநாட்டு வேலைலாய்ப்பை எவ்வாற பெற்றுக்கொள்வது தொடர்பான விளக்கங்களும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டது.

இவற்றிற்கு மேலதிகமாக பயிர் சிகிச்சை முகாமும் குறித்த விற்பனை நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்ததுடன் பயிற்செய்கையில் ஏற்படும் நோய் பீடை தாக்கங்களிற்கான உடனடி மற்றும் நிரந்தர தீர்வுகள் தொடர்பாகவும் விளக்கமும் ஆலோசனையும் பங்குபற்றியவர்களிற்கு வழங்கப்பட்டது.