சிறுதானிய உணவு ஊக்குவிப்பு நாள் – 2023

சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு எமது பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையையும் மேம்படுத்தி எமது உள்ளுர் விவசாயப பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உலக தரிசன நிறுவன நிதி அனுசரணையுடன் சிறுதானிய உணவு ஊக்குவிப்பு நாள் 2023.06.15 வியாழக்கிழமை காலை 08.30 மணிக்கு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம்இ திருநெல்வேலியில் திருமதி. அ.சிறிரங்கன் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்இ யாழ்ப்பாணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் திரு எஸ்.எம் பந்துலசேன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.சிவபாலசுந்தரன், மற்றும் வடமாகாண விவசாயம் அமைச்சின் செயலாளர்இ திரு.ம.ஜெகூ ஆகியோரும் மற்றும் வட மாகாணத்தின் அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இந் நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வில் சிறு தானிய அறுவடை மற்றும் சிறுதானியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் மஞ்சள் பதப்படுத்தப்படுத்தல் செயன்முறை நடைபெற்றது.

சிறுதானிய ஊக்குவிப்பு நிகழ்வின் முக்கிய விடயமாக சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுப்பொருட்கள் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்களின் வழிகாட்டலில் ஆரோக்கியம் விவசாயப் பெண்கள் அமைப்பின் (அம்மாச்சி உணவக) அங்கத்தவர்களினால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை சிறப்பிற்குரியது. அந்த வகையில்
• குரக்கன் சார் உணவுப் பொருட்கள்
• தினை சார் உணவுப் பொருட்கள்
• சாமை சார் உணவுப் பொருட்கள்
• கம்பு சார் உணவுப் பொருட்கள்
• சோளம் சார் உணவுப் பொருட்கள்
• வரகு சார் உணவுப் பொருட்கள்
• இறுங்கு சார் உணவுப் பொருட்கள்
• சிறுதானியங்களை கலவையிலான உணவுப் பொருட்கள்

உள்ளடக்கியதாக 65 வகையான உணவுப் பதார்த்தங்;கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் சுவை பார்ப்பதற்காகவும் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தமை சிறப்பிற்குரியது.

சிறு தானிய உணவுப் பொருட்களில் சில உணவுகள் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் சிறுதானிய உணவு நுகர்வில் விழிப்புட்டல் வழங்கப்பட்டது. அத்துடன் இவ் உணவுப் பொருட்கள் செய்முறை விளக்க புத்தக வெளியீடும் இடம் பெற்றது.

யாழ் மாவட்ட விதை உற்பத்தி கூட்டுறவு சங்கம், யாழ்; மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், காரை இளம் விவசாயிகள் கழகம் ஆகியவற்றால் சிறுதானியங்களுக்குரிய விதைகள் மற்றும் நாற்றுக்களும் விற்பனை செய்யப்பட்டன. விவசாயம் சார்ந்த கையேடுகள், சஞ்சிகைகள் என்பன விவசாயத் திணைக்கள பண்ணை ஒலிபரப்பு சேவையினரால் விற்பனை செய்யப்பட்டது.

உலக விவசாய நிறுவனம்; சிறுதானிய ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இவ் 2023ம் ஆண்டிலிருந்து சிறுதானியங்களை அதிகளவில் பயிரிடப்பட்;டு அதன் மூலம் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் எமது பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும் மேம்படுத்தப்பட்டு எமது எதிர்கால சந்ததியினரையும் ஆரோக்கியமுள்ளவர்களாக மாற்றுவதோடு எமது உள்ளுர் விவசாயப பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலுமுகமாகவே இவ் நிகழ்வு அமைந்திருந்தது.