தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாணத்தின் மாவட்ட ரீதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் சந்தை செயல் முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான ஒருநாள் பயிற்சிப்பட்டறை முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி, மாவட்டங்களில் தனித்தனியாக நடாத்தப்பட்டது.
இப்பயிற்சிப்பட்டறையில் முல்லைத்தீவு, மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 14 தொழில் முயற்சியாளர்களுக்கு 16.07.2024 ஆம் திகதியும் வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 14 தொழில் முயற்சியாளர்களுக்கு 18.07.2024 ஆம் திகதியும் மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 15 தொழில் முயற்சியாளர்களுக்கு 22.07.2024 ஆம் திகதியும் யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 35 தொழில் முயற்சியாளர்களுக்கு 25.07.2024 ஆம் திகதியும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 12 தொழில் முயற்சியாளர்களுக்கு 31.07.2024 ஆம் திகதியும் நடாத்தப்பட்டது.
இப்பயிற்சிப் பட்டறையில் Face book, Face book page, What’s App Business, Instagram மற்றும் Tik Tok ஆகியவற்றின் மூலம் தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உபாயங்கள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.