வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா மாவட்டத்திற்கான மாற்றுத்திறனாளிகள் தின விழா 19.11.2024 அன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக எமது பணிப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களும் கெளரவ விருந்தினராக Varod இயக்குனர், வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி அதிபர் மற்றும் வவுனியா நகரசபை செயலாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். மேற்படி நிகழ்வு மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வுகளுடன் இனிதே நிறைவு பெற்றது
வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் யாழ் மாவட்டத்திற்கான மாற்றுத்திறனாளிகள் தின விழா 20.11.2024 அன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது யாழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வேலனை பிரதேச செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினராக எமது பணிப்பாளர் அவர்களும் கெளரவ விருந்தினராக Save the life திட்ட இணைப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். மேற்படி நிகழ்வு மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வுகளுடன் இனிதே நிறைவு பெற்றது
வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் முல்லலைத்தீவு மாவட்டத்திற்கான மாற்றுத்திறனாளிகள் தின விழா 21.11.2024 அன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது முல்லலைத்தீவு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினராக எமது பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். மேற்படி நிகழ்வு மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வுகளுடன் இனிதே நிறைவு பெற்றது
வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாற்றுத்திறனாளிகள் தின விழா 22.11.2024 அன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக மாவட்ட செயலாளர்(காணி) நளாயினி அவர்களும் சிறப்பு விருந்தினராக எமது திணைக்கள உதவிப் பணிப்பாளர் தனுஜா அவர்களும் கெளரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள். மேற்படி நிகழ்வு மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு நிகழ்வினை தொடர்ந்து கலை நிகழ்வுகளுடன் இனிதே நிறைவு பெற்றது
வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்திற்கான மாற்றுத்திறனாளிகள் தின விழா 10.12.2024 அன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது மன்னார் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக மாவட்ட செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினராக எமது திணைக்கள உதவிப் பணிப்பாளர் தனுஜா அவர்களும் கெளரவ விருந்தினர்களாக நானாட்டான் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் அவர்களும் காவேரி கலாமன்றத்தின் திட்ட முகாமையாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். மேற்படி நிகழ்வு மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு நிகழ்வினை தொடர்ந்து கலை நிகழ்வுகளுடன் இனிதே நிறைவு பெற்றது.