சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் பகுதியில், ஆன்மீக அறக்கட்டளைகள் இணைந்து கட்டி முடித்த வீட்டைக் கையளிக்கும் நிகழ்வு

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் பகுதியில், ஆன்மீக அறக்கட்டளைகள் இணைந்து கட்டி முடித்த வீட்டைக் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (17.01.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளரால் எஞ்சிய வேலைகளை முடிக்க முடியாத சூழலில் புலம்பெயர் தேசத்திலுள்ள சில ஆன்மீக அறக்கட்டளைகள் இணைந்து அதனை முடித்து வழங்கியுள்ளன. இதனை வீட்டின் உரிமையாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், வீட்டை நாடா வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி சுபாஜினி மதியழகனும் பங்கேற்றனர்.