சங்கிலியன் பூங்கா, இணுவில் சிறுவர் மருத்துவமனைக்கான காணிகளை ஒழுங்குமுறைப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

சங்கிலியன் பூங்கா மற்றும் இணுவிலில் சிறுவர் மருத்துவமனைக்காக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை மாலை (11.10.2025) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், பிரதி நில அளவையாளர் நாயகம், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி, நல்லூர் பிரதேச செயலர், உடுவில் உதவிப் பிரதேச செயலர், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திட்டமிடல் பிரிவு மருத்துவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.