கல்விப் பயணத்தில் முக்கியமான மைல்க்கல்லான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளைய தினம் (25.11.2024) ஆரம்பமாகின்றது. இப்பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் வெற்றியடைய உளமார வாழ்த்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கல்விப்பொதுத்தராதர பரீட்சை நாளை (25.11.2024) ஆரம்பமாகும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17, 212 மாணவர்கள் தோற்றுகின்றனர். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் கடந்த ஆண்டு பெற்றுக்கொண்ட முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் மாணவர்கள் செயற்படுவார்கள் என நம்புகின்றேன்.
உங்களது கடின உழைப்பு, உறுதிப்பாடு ஆகியன வெற்றிக்கான திறவுகோல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களில் நம்பிக்கை வைத்து உங்களாலான சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி வெற்றிபெற வாழ்த்துகின்றேன் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு
24.11.2024