உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி 20 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிப்பு

வடக்கு மாகாணம் மற்றும் நாடு முழுவதும் உருளைக்கிழங்கு பயிற்செய்கையில் ஈடுபடும்  விவசாயிகளின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் விளைச்சல் காலத்தில் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியினை அதிகரிக்கக்கோரி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தார்.

ஆளுநர் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கமைய உடனடியாகவே உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியினை 20 ரூபாவிலிருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்குமாறு விவசாய அமைச்சர் பி.ஹரிசன் அவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியதன் பிரகாரம் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 01 பெப்பிரவரி 2019  இலிருந்து அமுலுக்கு வரும்வகையில் 20 ரூபாவிலிருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.