உதவிகளை மாவட்டச் செயலகங்களுடன் ஒருங்கிணைந்து முன்னெடுக்கு தெரிவிப்பு

இடர்நிலைமையின் போது தன்னார்வமாக உதவிகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அந்தந்த மாவட்டச் செயலகங்களுடன் தொடர்புகொண்டு உதவிகளை வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேரடியாக சில நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதனால், ஒரே தரப்பினரே அவற்றை மீளவும் பெறும் வாய்ப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், மாவட்டச் செயலகங்களுடன் ஒருங்கிணைந்து இதனை முன்னெடுப்பதன் ஊடாக வினைத்திறனாக மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.