இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் நிகழ்வானது 04.12.2023 திங்கட்கிழமை அன்று கொழும்பு BMICH இன் தாமரை மண்டபத்தில் இடம்பெற்றது.
2022 ஆம் ஆண்டின் நிதிக்கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட இப் போட்டியானது தேசத்தில் பொது நிதிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு பங்களித்து, நிதி அறிக்கையிடலின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு இலங்கையின் பொதுத்துறை நிறுவனங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாக விளங்கும் இவ் விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டதுடன் மக்கள் வங்கியின் தலைவர், தலைவர் – இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவகம், இலங்கையின் APFA இன் தலைவர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், உள்ளூர் அதிகாரிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அந்த வகையில் வடக்கு மாகாண சபை மற்றும் பிரதம செயலாளர் செயலகம், வெள்ளி விருதுகளை பெற்றுக்கொண்டதுடன் ஏனைய அமைச்சுக்கள் திணைக்களங்கள்(10) மற்றும் உள்ளூராட்சி சபைகளும்(28) இணக்க சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.