இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வு– 2025

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள அரிப்பு விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பூநொச்சிக்குளம் கிராமசேவகர் பிரிவில் இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வானது 30.09.2025 ஆம் திகதி செவ்வாயக்கிழமை காலை 10.30 மணியளவில் திரு. M.R.M. இஸ்ஸதீன் அவர்களின் வயலில் மன்னார் மாவட்டத்தின் உதவி விசாயப் பணிப்பாளர் திரு.J.மேர்வின் றொசான் றோச் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், கிராம சேவகர் மற்றும் விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இப்பிரிவின் விவசாயப் போதனாசிரியரினால் இறுங்கு செய்கை தொடர்பான வெளிப்படுத்துகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் பாடவிதான உத்தியோகத்தர் திரு. A.J.G மார்க் அவர்களால் இறுங்கு செய்கைக்குரிய சாதகமான காலநிலை மற்றும் மண்வளம் காணப்படுவதாகவும் அத்துடன் சந்தை வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் இறுங்கு பயிர்செய்கை மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் எமது திணைக்களத்தில் மறுவயற்பயிர்களில் உள்ள திட்டங்கள் தொடர்பாக மேலதிக விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து GAP உத்தியோகத்தரினால் சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் GAP சான்றிதழ் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட விவசாயிக்கு GAP Entry Certificate வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து உதவி விசாயப் பணிப்பாளர் திரு.J.மேர்வின் றொசான் றோச் அவர்களினால் விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டு களவிஜயத்துடன் இவ் விழாவானது இனிதே நிறைவுபெற்றது.