கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியான காலநிலைக்கு ஏற்ற நெல் வர்க்கமாக டீப 377(வெள்ளை) நெல் வர்க்கம் இயந்திர நாற்று நடுகை மூலம் பரீட்சார்த்தமாக புளியம்பொக்கனை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறுவடை வயல் விழா நிகழ்வானது 24.09.2025 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திரு.யே.சேயோன் தலைமையில் நாகேந்திரபுரம் புளியம்பொக்கனை எனும் இடத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள், கண்டாவளை கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் பொது அமைப்பு சார்ந்தோர் விவசாயிகள், மற்றும் அருகிலுள்ள பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இயந்திர நாற்று நடுகை மூலம் டீப377(வெள்ளை) நெல் வர்க்கம் பரீட்சார்த்தமான செய்கையில் வெற்றி பெற்றுள்ளமைக்கு கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் தொழில்நுட்ப வழிகாட்டல்கள் உந்துசக்தியாக இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.