கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வானது 11.07.2025 அன்று காலை 9.00 மணியளவில் திரு.வே.சந்திரபோஸ் அவர்களின் வயலில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.சோ.விஜயதாசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன், காலநிலைக்குச் சீரமைவான விவசாய திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, விவசாயிகள், சமூக நலன் விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கிளிநொச்சி பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் பங்களிப்புடன் யூனியன் விழுதுகள் இளைஞர் விவசாயக்கழகத்தால் 10 ac பரப்பளவில் இயந்திர நாற்று நடுகை மூலம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.