கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தின் கீழான நிலக்கடலைச் செய்கையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், நிலக்கடலை வயல்விழாவானது 18.11.2026 அன்று நடைபெற்றது. இவ் வயல்விழாவானது இத்தாவில் நல்லம்மா தோட்டத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. விவசாயி திரு.தி.சசிந்திரன் அவர்களின் விவசாய நிலத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் விவசாயப்போதனாசிரியர் திருமதி.ல.மஞ்சூரி அவர்களின் தலைமையில் நிலக்கடலை செய்கையின் முன்னேற்றம், பயிர்ச்செய்கை அனுபவங்கள், ஜிப்சத்தின் பசளை உரப்பயன்பாடு தொடர்பான விடயங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
மேலும் விவசாயிகளிடையே நிலக்கடலை பயிர்ச்செய்கையை ஊக்குவித்து அதன் உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் நவீன விவசாய முறைகளை பயன்படுத்துவதும் இவ் விழாவின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், பளை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இத்தாவில் கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச கமக்கார அமைப்பின் தலைவர், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்திருந்தனர்.








