ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் – பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையினைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சந்திப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையினைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சிலரை கடந்த வரம் (ஒக்.31) லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார்.

வடமாகாணத்தில் முதலாவது தமிழ் ஆளுநராக, வடமாகாணத்தை அபிவிருத்தி பாதைக்கு முன் கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் , கட்டமைப்பு மாற்றங்கள் குறித்தும் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்த ஆளுநர் அவர்கள் , வடமாகாணத்தை மேலும் அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு அவர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இதன்போது தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டில் வசிக்கும் புலம்பெயர்தமிழர்கள் தமது உதவியினை வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு முதலிடுவதன் ஊடாகவும் மேற்கொள்ளமுடியும் என்பதுடன், இந்த முதலீடுகளை இலகுவாக்குவதற்கும் வெளிப்படைத்தன்மையினை கொண்டிருப்பதற்கும் ஏதுவாக வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபித்திருப்பதாகவும் அந்த வங்கியின் ஊடாக வடமாகாணத்தின் அபிவிருத்திக்கான முதலீடுகளை புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளமுடியும் என்றும் ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு