ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுடன் மேற்கொள்ளப்படும் iRoad திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (11.5.2021) காலை 10 மணியளவில் கௌரவ ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதமசெயலாளர் , ஆளுநரின் செயலாளர் , உதவிச்செயலாளர் , இணைப்பு செயலாளர், உள்ளுராட்சி அணையாளர் , மாநகரசபை ஆணையாளர் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் , திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடமாகாணத்தில் இடம்பெறும் 17 ஒப்பந்த திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடிய கௌரவ ஆளுநர் அவர்கள் , வீதி அமைப்பதற்கான திட்டங்களினை வகுக்கும் போது கழிவுநிர் வடிகாலமைப்பு , மின்சாரம் , நீர் வடிகாலமைப்பு என்பவற்றினை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளினை தவிர்க்கும் முகமாக நகரசபை , மாநகரசபை மற்றும் பிரதேச சபை ஆகியன வீதி நிர்மாண பணிகளை தொடங்குவதற்கு முன்னர் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடி தேவையான இட வசதியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்ததோடு; மாநகர சபைகள் கட்டடங்களுக்கான அனுமதியினை வழங்கும் போது எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்தார்.
அதனைதயடுத்து , யாழ் மாவட்டத்தின் iRoad திட்டத்தின் நிலைப்பாடு தொடர்பில் கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள் கிரவல் மற்றும் மணலினை சட்டபூர்வமான முறையில் பெற்றுக்கௌ;வதற்கு, மணலின் அளவு தொடர்பான தகவலினையும் அதற்குரிய அனுமதியினையும் மாவட்ட அரசாங்க அதிபர்களின் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
மேலும் , கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் iRoad திட்டம் தொடர்பில் கலந்துரையாடுகையில் , கிராமப்புற வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதினை தவிர்க்கும் முகமாக வர்த்தமாணியில் பிரசூரம் செய்வதுடன் குறித்த வீதிகளில் பதாதைகளினை காட்சிப்படுத்துவதுடன் பொலிசாருக்கும் அறியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் கருத்துதெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் , வடமாகாணத்தின் சனத்தொகையினை கருத்தில்கொண்டே அனைத்து அபிவிருத்தி திட்டங்களினையும் தயார்செய்யவேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் , முல்லைத்தீவு , மன்னார் , வவனியா ஆகிய மாவட்டங்களில் இடம்பெறும் iRoad திட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.