இந்த வருடத்திற்கான சர்வதேச முதியோர் தினமானது ‘மூத்தோர்கள் தங்கள் அபிலாஷகளை, தங்கள் நல்வாழ்வை, தங்கள் உரிமைகளை நோக்குமாறு உள்ளூரையும் உலகத்தையும் உந்துகின்றனர்’ எனும் ஐ.நா.வின் 2025 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
அந்த வகையில் கைதடி அரச முதியோர் இல்லத்தில் வழமை போன்று சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு ஒக்டோபர் 01 – 07 ஆந் திகதி வரை முதியோர் வாரமாக வெகு விமர்சையாக நடைபெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
01.10.2025 ஆம் திகதி புதன் கிழமை பி.ப 02.30 மணியளவில் ஆரம்பமாகியது.
முதலாம் நாள் நிகழ்வுகள் திருமதி. தனுஜா லுக்ஷhந்தன் மாகாணப்பணிப்பாளர், மாகாண சமூக சேவைகள் திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களின் தலைiமையில் இடம்பெற்றது.
இவ்நிகழ்வின் பிரதம அதிதியாக மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் திணைக்கள அமைச்சின் செயலாளர் திரு. மு.நந்தகோபாலன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
சிறப்பு அதிதிகளாக செல்வி.செ.அகல்யா (ஆணையாளர், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திணைக்களம் வ.மா), வைத்தியர். கல்பனா.ஸ்ரீ (பொது வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கௌரவ அதிதிகளாக செல்வி.இ.ஜெயசுதர்சினி (நிர்வாக உத்தியோகத்தர், சமூக சேவைகள் திணைக்களம் வ.மா), திரு.க.சிதம்பரநாதன் (சமூக சேவைகள் உத்தியோகத்தர், சங்கானை), திரு. பொ.மனோகரன் (மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர், சாவகச்சேரி), திரு.வ.செல்வம் (அத்தியட்சகர் (ஓய்வு நிலை), அரச முதியோர் இல்லம், கைதடி) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் இல்ல வாழ் முதியவர்களினால் பூங்கொத்து வழங்கி வரவேற்கப்பட்டனர்.
அடுத்து தேசியக்கொடி அமைச்சின் செயலாளர் அவர்களினால் ஏற்றப்பட்டதும் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது தொடர்ந்து மாகாணக் கொடி திருமதி. தனுஜா லுக்ஷhந்தன் மாகாணப்பணிப்பாளர்,மாகாண சமூக சேவைகள் திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களினாலும் இல்லக் கொடி இல்ல அத்தியட்சகரினாலும் ஏற்றி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அதிதிகள், இல்ல வாழ் முதியவர்கள் மற்றும் அலுவலர்களினால் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டதனை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து வரவேற்பு நடனம் லயநாட்டியா நடனப்பள்ளியினரால் இடம்பெற்றது. அபிநய நாடகம் கைதடி கிழக்கு சனசமூக நிலைய பாலர் காடசாலை மாணவர்களால் இடம்பெற்றது.
அடுத்து திரு. நா.இராஜமனோகரன், அத்தியட்சகர், அரச முதியோர் இல்லம், கைதடி அவர்கள் வரவேற்பு உரையினை நிகழ்த்தியிருந்தார் அத்துடன் தலைமை உரையினை திருமதி. தனுஜா லுக்ஷhந்தன் நிகழ்த்தியிருந்தார். அதனைத்தோடர்ந்து அதிதிகள் உரைகள் இடம்பெற்றது.
மேலும் நிகழ்வு சிறப்புறும் வகையில் சிவகுருஐயர் வில்லிசைக்குழு, கிளிநொச்சி விடிவெள்ளி சிரேஷ;ட பிரஜைகள் குழு மற்றும் இல்ல முதியவர் சந்திரஜித் சமரநாயக்கா அவர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் உட்பட பலரும் ஆர்வத்ததுடன் பங்கேற்றிருந்தனர்.