வடமாகாண சபை வளாகத்தின் மரநடுகை நிகழ்வு

Casinos Near San Diego, CA - Pros & Cons of Each Trip

வடமாகாண சபை வளாகத்தின் பிரதம செயலாளர் செயலகத்திற்கான மரநடுகை நிகழ்வானது வடமாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் 13.12.2022 மற்றும் 14.12.2022 ஆகிய தினங்களில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு மர நடுகையை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உதவிப் பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்,பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் மரநடுகையை மேற்கொண்டனர்.
இம் மரநடுகை நிகழ்வில் புங்கை மரங்கள், தேக்கு, மா, பலா போன்ற மரங்கள் உள்ளடங்கலாக 55 மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.