வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன

Casino Bonuses You Can Get Without Making a Deposit First

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு ஆளுநரின் தலைமையில் 19 ஏப்பிரல் 2019 அன்று பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ் பண்ணை கடற்கரைப் பூங்கா பகுதியில் மரக்கன்று நாட்டும் செயற்திட்டம் ஆளுநரின் தலைமையில்  இடம்பெற்றது. வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி கே சிவஞானம், யாழ் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ் மாவட்ட செயலாளர் திரு.வேதநாயகன், யாழ் பிரதேச செயலாளர் திரு சுதர்சன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் உரும்பிராய் லயன்ஸ் கழகம் ஏற்பாடு செய்த இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில்  ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வின்போது மரக்கன்றுகளும் ஆளுநர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.