வடமாகாணத்தின் திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான கலந்துரையாடல்

Casino Apps That Give Out Free Spins Every Day

வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான இவ்வருடத்திற்கான ஆரம்ப  கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (04.01.2021) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, 2021 ம் ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்த நாம் வடமாகாண அபிவிருத்தி என்ற விடயத்தில் பொருளாதார சமூக ரீதியில் பல்வேறு தடைகளை தாண்டவேண்டி ஏற்பட்டது. வடமாகாண ஆளுநர் என்ற பதவியை ஏற்று ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் என்னோடு இணைந்து பயணித்த பிரதம செயலாளர் தலைமையிலான குழுவினர் மற்றும் அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

மாகாண சபையில் கடமையாற்றுவது முதலாவது சந்தர்ப்பம் எனவும் அந்த வகையில் மாகாண சபை ஆட்சி இல்லாத கட்டத்தில் 5 அமைச்சுக்களின் பொறுப்புடன் ஆளுநர் என்ற பொறுப்பையும், covid-19 தொற்றுக்கிடையில் வடமாகாண மக்களை இந்நோயிலிருந்து  பாதுகாத்து, மக்களின் பொருளாதார சமூக பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்தும், கடந்த ஆண்டில் வரவு செலவு திட்டமில்லாது  கடந்த வருடத்திற்கு முன்னைய ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி முடித்து எவ்வித மீதியும் இன்றி முழுமையாக செயற்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகளுக்கு முன்னின்று உழைத்த பிரதம செயலாளர் மற்றும் நிதிக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்ததுடன் கடந்த வருடத்தில் ஏற்பட்ட covid-19 இடர்நிலையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மாவட்ட செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், இராணுவத்தினர், காவற்துறை மற்றும் கடற்படையினருக்கும் நன்றியை தெரிவித்தார்.

மேலும், ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்தில் covid-19 குறைவாக காணப்பட்டது. அந்த வகையில் தேசிய ரீதியில் covid-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரச ஊழியர் என்ற வகையில் 3 பில்லியன் ரூபாவை பங்களிப்பு செய்ய முடிந்தது. இதில் 20 மில்லியன் கையிருப்பில் உள்ளதாகவும் அந்நிதியை காணி இல்லாதவர்களுக்கு LRC காணிகளை வழங்குவதற்கு உத்தேசிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அனர்த்தத்துடன் அனர்த்தமாக பல விடயங்களை சாதித்ததாக தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் யாழ் மக்களின் முக்கிய நீண்டகால பிரச்சனையாக உள்ள குடிநீர் பிரச்சனைக்கான தீர்வு காணப்பட்டுள்ளது. வடமராட்சி பிரதேசத்திற்கான திட்டம் கௌரவ சமல் ராஜபக்ச  அவர்களின்  அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட கடல்நீரை சுத்தமாக்கும் திட்டத்தை பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பிரதம அமைச்சர் அவர்கள் யாழ் மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற அவரின் விருப்பத்திற்கு இணங்க தற்போது அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்றுள்ளது. எனவே ஒருமாத காலத்துள் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதேபோன்று காணி ஆணைக்குழுவை அமைத்து அதனூடாக 550 காணி பிணக்குகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளது.  பிரதம செயலாளர் எடுத்த முயற்சியினால் 48 புதிய நியமனங்கள்  வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கினூடாக பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்றத்தின் பேச்சுவார்த்தை மூலம் மீள அவர்களை நியமனம் செய்து பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பொதுவாக அனைத்து அமைச்சர்களும் தமது கடமைகளை சீர்திருத்தம் செய்துகொண்டே   நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். தற்போது இடமாற்ற கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. இங்கு முக்கியமாக வளங்கள், நகரத்தை மட்டும் மையமாக கொண்டிராது, கிராமப்புற மக்களின் தேவைப்பாடுகளையும் கருத்திற் கொண்டு வளப்பகிர்வு சீராக நடைபெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதற்கு “The Hindu” பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையை எடுத்துக்காட்டி யாழ்ப்பாணத்தை மத்தியாக கொண்ட ஒரு நிர்வாகத்தைத்தான் வடமாகாண நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மக்கள் நினைத்து கொண்டிருப்பதாக மேற்படி பத்திரிகை நிருபர் மக்களுடனான நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். எனவே அப்பிரதேச மக்களின் பிரச்சனை அடிப்படையிலேயே அவர்களுக்குரிய தீர்வை பெற்றுக்கொடுக்க  வேண்டுமென அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

எனவே எதிர்வரும் ஆண்டுக்கென ஒதுக்கப்படும் நிதிகளை மத்தியிலோ,  நகரத்திலோ,  அலங்காரத்திற்கும் மெருகூட்டலுக்காகவும் அல்லாது மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் விடயங்களுக்கு மட்டும்  செலவு செய்யப்படவேண்டுமென வலியுறுத்தபட்டது.

மேலும், பாடசாலைகளில் வெறும் கட்டடங்களை மட்டும் அமைக்காது மாணவர்களுக்கான அனைத்து தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யக்கூடிய நீர் மற்றும் மலசல கூடம் என்பவை காணப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. உள்ளுராட்சி மன்றங்களினால் அமைக்கப்பட்டுள்ள சந்தை கட்டடங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் எவையும் காணப்படவில்லை என கௌரவ ஆளுநர் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே பெண்கள் அமைப்புகள் பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் செயற்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் சுகாதார அமைச்சு மற்றும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் இரு வைத்தியசாலைகள் புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் வைத்தியர் பற்றாக்குறைக்குரிய தீர்வு எட்டப்படுமெனவும் கௌரவ ஆளுநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி துறைரீதியாக கலந்துரையாடப்பட்டது. இவை தொடர்பான திட்டங்களில் மக்களின் தேவைக்கு மட்டும் முன்னுரிமை வழங்கி அவற்றை செயற்படுத்த கௌரவ ஆளுனரால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அத்துடன் இத்திட்டங்கள் வினைத்திறனாக ஒரு திட்டம் மூலம் செயற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நிர்வாக ரீதியில் வழங்கப்பட வேண்டிய நியமனங்கள் எதிர்வரும் பெப்ரவரி 15 இற்குள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் அரச உத்தியோகத்தர்கள் எவராயினும் ஊடகத்துறையின் பகுதிநேர கடமையில் ஈடுபடுவாராயின் அது தொடர்பில் உரிய அமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் குறித்த ஊடக நிறுவனம் ஊடக அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் அந்த நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் அவர்களுக்குரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கூட்டுறவுத் துறையை முன்னேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து covid-19 இடர்நிலையின் தற்போதைய நிலைமை மற்றும் டெங்கு  நிலைமை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் விவசாயத்துறையில் வங்கிகளை ஈடுபடுத்தும் நடவடிக்கைகள், உள்நாட்டில் கைத்தறி புடவை உற்பத்தியின் முயற்சியாளர்களை ஊக்குவித்தல், covid-19 நிலையில் சந்தைகளை எவ்வாறு திறப்பது, எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள   பாடசாலைகளின் நிலை, மற்றும் ஆயுர்வேத மூலிகைகளை வளர்த்து அவற்றின் தரத்தை முன்னேற்றல் போன்றவை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Boston Casinos You Need to Visit in 2023