வடமராட்சி வான்கதவுகள் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பகுதிக்கு ஆளுநர் விஜயம்

வடமராட்சி மீனவர்களது 8 வான்கதவுகளின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பருத்தித்துறை பகுதிக்கு 05 ஒக்ரோபர் 2019 அன்று பிற்பகல் ஆளுநர் அவர்கள் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டு அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அப்பகுதி மீனவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

இதன்போது பருத்தித்துறை முனைப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்கள், வடமராட்சி கடற்றொழில் சமாசத்தின் தலைவர், மீன்படி சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அப் பகுதியில் வாழும் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

16 வான்கதவுகள் சீரமைப்பதற்காக கௌரவ ஆளுநர் அவர்களிடம் வடமராட்சி கடற்றொழில் சமாசத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முதற்கட்டமாக 8 வான் கதவுகள் சீரமைப்பதற்கான 2 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.