வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினால் சுற்றுச்சூழல் தின நிகழ்வு 20.06.2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ தலைமையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின நிகழ்வில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, அறுவடை சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு ஆகியன இடம்பெற்றதோடு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நாடகப்போட்டியில் முதலாமிடம் பெற்ற தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலய மாணவர்களின் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ம.பற்றிக் டிறஞ்சன் கலந்து சிறப்பித்திருந்ததோடு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.பிரதீபராஜா, வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன், நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி ந.சுதாகரன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் வசீகரன் உள்ளிட்ட ஏனைய அரச திணைக்களங்களில் அதிகாரிகள், விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பண்ணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.