வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு மரம் நடுகை விழா

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா கடந்த 17.11.2022 ஆம் திகதி வியாழக்கிழமை வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நடைபெற்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்லுண்டாய் பகுதியிலும் கிளிநெச்சி மாவட்டத்தில் இரணைமடு இடது கரை பகுதியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ9 மாங்குளம் வீதியின் இரு ம
ருங்கிலும் வவுனியா மாவட்டத்தில் தாண்டிக் குளம் அரசு விதை உற்பத்தி பண்ணைப்பகுதியிலும் மன்னர் மாவட்டத்தில் பாலாவி திருக்கேசரம் பகுதியிலும் என வடக்கு மாகாணம் முழுவதும் குறித்த தினத்தில் 1500 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

இவற்றிற்கு மேலதிகமாக வட மாகாண மர நடுகை மாத பகுதியில் வட மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள திணைக்கள வளாகங்களில் ஏறக்குறைய 600 பழ மரக்கன்றுகள் நாட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு பழமரக்கன்றுகள் நாட்டப்பட்டுவருகின்றன.

குறித்த நிகழ்வுகளில் வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்தினதும் மாவட்டச் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் திணைக்களங்களின் பணிப்பாளர்களும் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்ற மரம் நடுகை நிகழ்வுகளில் குறித்த மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், குறித்த பிரதேசங்களின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மாவட்டத் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், விவசாய அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் உதவிப்பணிப்பாளர்கள் விவசாயிகள், பண்ணையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த மரம் நடுகை விழாவினை விவசாய திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் மீன்பிடி பிரிவு ஆகிய இணைந்து ஏற்பாடு செய்வதுடன் மர நடுகை விழாவிற்கான ஒத்துழைப்பினை மரம் நடுகை நடைபெறும் இடங்களின் உள்ளூராட்சி சபைகள் வழங்கியிருந்தன.

Exciting Online Casino Games You Should Try At Least Once