யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோரை 29.10.2024 அன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் சந்தித்தார். பாசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிபுரை வழங்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்திருந்தனர் என்ற செய்தியை அறிந்து ஆளுநர் அவர்கள் இந்த நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள பணித்தார்.
பாடசாலைக்கு உரிய ஆசிரியர்களை விரைவாக நியமனம் செய்யுமாறு ஆளுநர் பணிபுரை விடுத்தார். பாடசாலை ஆனது மாணவர்களின் நலன்கள் சார்ந்த இயங்க வேண்டும் எனவும் கிராமப்புற பாடசாலைகளுக்கு நகரப்புற பாடசாலைகளுக்கு சமனாக குறைபாடுகள் இன்றி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அனைத்து பிரதேசங்களுக்கும் சமனாக சேவைகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பாதிப்பு அடையாத வகையில் ஏனைய செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.