வங்கிகளில் அடமானம்வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை –கௌரவ ஆளுநர் வவுனியாவில் தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கான 5400 காணி உறுதிகள் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் நேற்று (26/05/2024) வழங்கி வைக்கப்பட்டது .

Best Online Casino UK Sites (March 2023)

இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், காணிப் பத்திரங்களை மீண்டும் பிரதேச செயலாளர்களிடம் வழங்கி தங்களுக்கான உறுதிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக கூறினார். காணி பத்திரம் கைமாற்றப்பட்டுள்ளமை, சீதனமாக வழங்கியுள்ளமை, வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளமை போன்ற காரணங்களால், பலருக்கு உரித்து திட்டத்தின் கீழ் காணி உறுதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக கௌரவ ஆளுநர் தெரிவித்தார். எனினும் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணி பத்திரங்கள் தொடர்பில் கலந்துரையாடி ஜனாதிபதி அவர்கள் தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பார் எனவும் கௌரவ ஆளுநர் குறிப்பிட்டார். எனவே ஜனாதிபதியின் கனவு திட்டமான உரித்து வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் இதன்போது கௌரவ ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No Deposit Free Play Online Casinos for 2023