யாழ் கலாசார மத்திய நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றது.

02.10.2024ந் திகதி மகாத்மா காந்தியின் 155வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் கலாசார மத்திய  நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும் இந்திய துணைத்தூதர் ஶ்ரீமான் சாய் முரளி அவர்களும், யாழ் மாநகர சபை  ஆணையாளர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்துசிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து  கலந்துரையாடல் இடம்பெற்றது.

இறுதியில் கௌரவ ஆளுநர் அவர்கள் கலாசார மத்திய நிலையத்தை முழுமையாக பார்வையிட்டதுடன் கலாச்சார மத்திய நிலையத்தின் செயல்பாடுகள்  தொடர்பான விடயங்களையும்  கேட்டறிந்து கொண்டார்.