முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பாலங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் தட்டாமலை வீதிப்பாலம், தண்டுவான் பெரியகுளம் வீதிப்பாலம் மற்றும் நெடுங்கேணி தண்ணி முறிப்பு வீதிப்பாலம் ஆகிய மூன்று பாலங்கள் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் தவிசாளர் அவர்களால் 20/02/2020 அன்று வைபவரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.