மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு கௌரவ ஆளுநர் விஜயம்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு இன்று (11) முற்பகல் விஜயம் செய்த கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்களை ஆலய பிரதம குருக்கள் மகாராஜஸ்ரீ டி.எஸ். இரத்தினசபாபதி அவர்கள் வரவேற்றதுடன் ஆளுநர் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். இதன்போது ஆலயத்தின் குறைபாடுகள் மற்றும் ஆலயத்தின் அபிவிருத்தி தேவைகள் குறித்தும் ஆளுநர் அவர்கள் கேட்டறிந்துகொண்டார்.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு