மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – வவுனியா மாவட்டம்

Best US Poker Sites 2023 - American Poker Rankings

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 18 டிசெம்பர் 2020 அன்று மாலை 2.௦௦ மணிக்கு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான திலீபன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்பு செயலாளர்  வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், வவுனியா உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலர்கள், வடமாகாண திணைக்கள தலைவர்கள், காவற்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், மாவட்ட அரச அதிபரினால் சமர்பிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்காக இவ்வாண்டில் நடைபெறும் 2வது கலந்துரையாடல் இதுவாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அதுகுறித்த  மீளாய்வு அறிக்கை கிடைக்கபெற்று அதனை அவதானித்ததாகவும், அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் உறுதியாக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். தீர்மானங்களின் நடைமுறைப்படுத்தலின் செயல்வடிவத்தையே பொது மக்கள் தங்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர்பார்கிறார்கள். எனவே உரிய திணைக்கள தலைவர்கள் தீர்மானங்களை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென கௌரவ ஆளுநர் அவர்களால் வலியுறுத்தபட்டது.

மேலும் தெரிவிக்கையில், காலநிலை மற்றும் கொவிட்-19 தொற்றிடர் காரணமாக சுகாதார துறையினரால் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பிரதேச செயலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் எழுமாறாக மேற்கொள்ளபட்ட பரிசோதனைகளில் பல  சந்தை வியாபாரிகளுக்கு  பல்வேறு இடங்களில் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படபோகும் அபாயகரமான நிலையை கருத்திற் கொண்டு மறு அறிவித்தல்வரை சந்தைகளை  மூடவும், வீதியோர வியாபாரம் மற்றும் நடமாடும் விற்பனையை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், விவசாயம், மீன்பிடி,கால்நடைவளர்ப்பு, வீதி அபிவிருத்தி, வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் விவசாயிகளின் விதை பிரச்சனை, பேராறு நீர்தேக்க திட்டம், காணி உரிமம் தொடர்பான பிரச்சனைகள், வைத்தியசாலை கட்டட நிர்மாண வேலைகள், கொவிட்-19 நிலைமை, கல்வி, சுகாதாரம் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இத்திட்டங்கள் பிரச்சனைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் பேராறு நீர்த்தேக்கம் தொடர்பில் தெரிவிக்கையில் அபிவிருத்தி என்ற விடயத்தை அனைவரும் நற்சிந்தனையுடன் நோக்க வேண்டுமெனவும், தற்போது யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற  நற்செய்தியையும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான விதை பிரச்சனை தொடர்பில் கேட்கப்பட்ட  கேள்விக்கு பதிலளித்த கௌரவ ஆளுநர் அவர்கள், வடமாகாணத்தில் விதை உற்பத்திக்கும் சேமிப்பிற்கும் சாதகமான சூழல் காரணிகள் காணப்படுகிறது. எனவே சிறுபோகத்தில் தரகர்கள் தொடர்பு நிகழ்ச்சித்திட்டம் மூலம் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிற்கும் திட்டங்களை உருவாக்கி செயற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. உற்பத்திசெய்து உடனடியாக விற்பனை செய்யமுடியாத பொருட்களை விதைகளாக மாற்றி சேமித்து தேவையானபோது விவசாயிகளுக்கு வழங்கவும்  மேலதிகமானவற்றை வேறு மாகாணங்களுக்கு விற்பனை செய்யவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும், காணி உரிமங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் காணி பதிவு சட்டத்தின் கீழ் பதிவிசெய்யப்பட்டமை காணி உரிமங்களில் மட்டுமே செல்லுபடியாகும் எனவும் பதிவுசெய்தல் சட்டத்தின்கீழ் அரசகாணிகளில் நீண்டகாலம் வசிப்பவர்களால் பதிவுசெய்யபட்ட காணி உரிமங்கள் செல்லுபடியற்றவை எனவும்  தெரிவித்தார்.

மேலும் வீதி அபிவிருத்தி மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது மக்களின் அபிப்பிராயங்களையும் கேட்டறிந்து செயற்பாடுகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் தனியார் கல்விநிலையங்கள் இயங்குவதற்கு எவ்வித அனுமதியும் இல்லையென தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் மாணவர்களுக்கான இணைய கற்றல் நடவடிக்கைகள் கல்வித்துறைசார் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், எடுக்கப்பட்டுள்ள அமைச்சரவை அனுமதிக்கு இணங்க வனவளத்துறை திணைக்களத்திடம் உள்ள காணி உரிமங்களை உரிய பிரதேச செயலாளர்களிடம்  கையளிக்க வலியுறுத்தப்பட்டது. அத்துடன் கிரவல், மரம்வெட்டல் போன்றவற்றிக்கான அனுமதி, வனவள அதிகாரிகளால் வழங்க ஏற்பாடு செய்யப்படுமாயின் அது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கும், மாவட்ட இணைத்தலைவருக்கும் தெரியப்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டது. வேறு பிரதேசங்களில் இருந்து கால்நடைகளை செட்டிகுளம், பாவற்குளம் பகுதிகளுக்கு மேச்சல்களுக்காக சட்டரீதியற்ற முறையில் கொண்டுவருதல் தொடர்பில் கௌரவ ஆளுநரிடம் வினவப்பட்டபோது, அது சட்டரீதியற்ற செயல் எனவும் அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க காவற்துறையினருக்கு  பணிப்புரை விடுக்கப்பட்டது.

மேலும், திணைக்களங்கள், பிரதேச சபை மைதானங்கள் மற்றும் ஆலயங்கள் என்பவற்றிற்கு ஒதுக்கப்பட்ட காணி உரிமங்களை அவர்களிடமே கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.